திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் பூச்சொரிதல் விழா


திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் பூச்சொரிதல் விழா
x

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் பூச்சொரிதல் விழா

ராமநாதபுரம்

தொண்டி

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.

பூச்சொரிதல் விழா

திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோவில் 48-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதனையொட்டி வல்மீகநாதர், வாழவந்த அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றது. இதைதொடர்ந்து சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், பாகம்பிரியாள் அம்மன் புஷ்ப பல்லக்கு அலங்காரத்திலும் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதனையொட்டி ஆயிரக்கணக்கான பெண்கள் அம்மன் சன்னதியில் இருந்து பூத்தட்டு எடுத்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலை சென்றடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பூஜைகளை மணிகண்ட சிவம், வல்மீக நாத குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

பாதுகாப்பு பணி

இந்த நிகழ்ச்சிகளில் சிவகங்கை சமஸ்தான சரக செயல் அலுவலர் செந்தில்குமார், ஆலய கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், வர்த்தக சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் வல்மீகநாதன், பொருளாளர் தங்கராஜ், துணைத்தலைவர் அம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை திருவெற்றியூர் கிராம மக்கள், வர்த்தக நல சங்கத்தினர் செய்து இருந்தனர். திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஸ், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story