அஞ்சுவட்டத்தம்மனுக்கு பூச்சொரிதல் உற்சவம்


அஞ்சுவட்டத்தம்மனுக்கு பூச்சொரிதல் உற்சவம்
x

கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் அஞ்சுவட்டத்தம்மனுக்கு பூச்சொரிதல் உற்சவம்

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அட்சயலிங்கசாமி கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழாவை முன்னிட்டு அஞ்சுவட்டத்தம்மனுக்கு பூச்சொரிதல் உற்சவம் நடந்தது. அப்போது பெண்கள் பலவிதமான பூக்களை எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து அஞ்சுவட்டத்தம்மனுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.


Next Story