தென்தாமரைக்குளம் பேரூராட்சியில் பேச்சிப்பாறை அணை தண்ணீருக்கு மலர்தூவி வரவேற்பு

தென்தாமரைக்குளம் பேரூராட்சியில் பேச்சிப்பாறை அணை தண்ணீருக்கு மலர்தூவி வரவேற்பு
x

தென்தாமரைக்குளம் பேரூராட்சியில் பேச்சிப்பாறை அணை தண்ணீருக்கு மலர்தூவி பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனர்.

கன்னியாகுமரி

தென்தாமரைக்குளம் பேரூராட்சியில் பேச்சிப்பாறை அணை தண்ணீருக்கு மலர்தூவி பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனர்.

வரவேற்பு

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று குமரி மாவட்டத்தின் கடைகோடியில் அமைந்துள்ள குளங்களில் ஒன்றான தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட தலக்குளம் வந்தடைந்தது.

தென்தாமரைக்குளம் பேரூராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளத்திற்கு தண்ணீர் வந்ததையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெங்கலராஜன் கால்வாய் நிறைவு பகுதியில் மலர்தூவி வரவேற்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் கார்த்திகா தலைைம தாங்கினார். இதில் தலக்குளம் புரவு தலைவர் மகேஷ், பேரூராட்சி துணைத்தலைவர் மல்லிகா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

Next Story