மகாமாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
திருவெறும்பூர் அருகேமகாமாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
திருச்சி
நவல்பட்டு, ஜூன்.8 -
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகர் சிலோன் காலனி பகுதியில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு எல்லை முனி ஆண்டவர், வழிவிடு பிள்ளையார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவில் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். வளர்மதி (வயது 70) என்ற பக்தர் பூக்குழி இறங்கியபோது, குண்டத்தில் தவறி விழுந்து காயம் அடைந்தார். இதனையடுத்து மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவுபெற்றது.
Related Tags :
Next Story