ஒட்டன்சத்திரம் பகுதியில் வெங்காய செடியில் பூத்துக்குலுங்கும் பூக்கள்


ஒட்டன்சத்திரம் பகுதியில் வெங்காய செடியில் பூத்துக்குலுங்கும் பூக்கள்
x
தினத்தந்தி 23 Aug 2023 2:30 AM IST (Updated: 23 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காய செடியில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் சின்ன வெங்காய பயிரை விதைகளாகவும், நாற்றுகளாகவும் நடவு செய்து வருகின்றனர். இதில், விதைகளை கொண்டு சாகுபடி செய்யும் சின்ன வெங்காயம் அதிக அளவு மகசூல் கிடைக்கும். இதனால் ஒட்டன்சத்திரம் பகுதியில் தண்ணீர் அதிகமாக உள்ள கிராமங்களில் விதை உற்பத்திக்காக சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் பூக்கும் பூக்களில் இருந்து விதைகள் சேகரிக்கப்படுகிறது. இந்தநிலையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் தற்போது விதைக்காக சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காய செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், "பொதுவாக ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிட 500 கிலோ வரை விதை வெங்காயம் வாங்க வேண்டும். ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் அறுவடை செய்து 45 நாட்கள் ஆன வெங்காயத்தை மட்டுமே பயிரிட முடியும். இந்த முறையில் பயிரிட்டால் செலவு மிகவும் அதிகமாகும். ஆனால் சின்ன வெங்காய பூக்களில் இருந்து எடுக்கப்படும் 1½ விதைகள், ஒரு ஏக்கருக்கு சாகுபடி ெசய்ய போதுமானது இந்த விதை ஒரு கிலோ ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. விதையை கொண்டு நடவு செய்து சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்கு செலவு குறைவு என்பதால் பெரும்பாலான விவசாயிகள் பூமியில் இருந்து எடுக்கப்படும் வெங்காய விதைகளை வாங்கி பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்" என்றனர்.


Next Story