சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கும் பூக்கள்


சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கும் பூக்கள்
x

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பூக்கள், சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்து வருகிறது.

திண்டுக்கல்

சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலில், காலநிலைக்கு ஏற்ப பல்வேறு வண்ணப்பூக்கள் பூத்துக்குலுங்குவது வழக்கம். பூக்கள் என்றவுடன் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா தான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழாவையொட்டி மலர்கண்காட்சி இங்கு நடத்தப்படுவது வழக்கம். கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைப்பதில் பிரையண்ட் பூங்காவுக்கு முக்கிய பங்கு உண்டு. பல்வேறு சிறப்புக்கு சொந்தமான இந்த பூங்காவில் தற்போது 2-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பல்வேறு வண்ணப்பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

குறிப்பாக பாப்பிஸ், லூபின், காஸ்மாஸ், பைன் செட்டியா, இட்லி பூ, பல வண்ண ரோஜா பூக்கள், பேர்ட் ஆப் பாரடைஸ் ஆகிய பூக்கள் பூத்துள்ளன. கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு இந்த பூக்கள் விருந்து படைத்து கொண்டிருக்கிறது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவுக்கு வந்து பூக்களை ரசித்து செல்கின்றனர். புன்னகை சிந்தும் பூக்களுடன் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

தொடர் விடுமுறையையொட்டி குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story