ரேஷன் கடையில் பறக்கும் படை தாசில்தார் ஆய்வு


ரேஷன் கடையில் பறக்கும் படை தாசில்தார் ஆய்வு
x

குடியாத்தம் ரேஷன் கடையில் பறக்கும் படை தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்

குடியாத்தம் நேதாஜி சவுக் செக்குமேடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும், கடை அடிக்கடி மூடப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ஏ.கோடீஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று அந்த ரேஷன் கடையில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் தரமற்ற முறையில் பல மாதங்களாக ரேஷன் அரிசி வழங்கப்படுவதாகவும், இதனால் பலர் ரேஷன் அரிசி வாங்காமல் திரும்பிச் செல்வதாகவும் குற்றம் சாட்டினர். அதிகாரிகள் ரேஷன் கடை ஊழியர்களிடம் பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாக கிடங்கில் இருந்து வந்தால் உடனடியாக அதனைக் கிடங்கிற்கு திருப்பி அனுப்பி தரமான பொருட்களை பெற்று பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் ஜோதிராமலிங்கம், நகர மன்ற உறுப்பினர் லாவண்யாகுமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story