காற்றில் பறந்து வந்த தகரம் தலையில் வெட்டியதில் மாற்றுத்திறனாளி பலி
கடமலைக்குண்டு அருகே காற்றில் பறந்து வந்த தகரம் தலையில் வெட்டியதில் மாற்றுத்திறனாளி பலியானார்.
தேனி
கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 56). மாற்றுத்திறனாளி. நேற்று மாலை இவர், வீட்டின் முன்புறம் உள்ள திண்ணையில் அமர்ந்து உறவினர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த காற்று வீசியது. இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த இரும்பு தகரம் காற்றில் பறந்து வந்து முருகன் தலையில் விழுந்தது.
இதில் தகரம் வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story