உணவு பாதுகாப்பு கருத்தரங்கு
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நேற்று கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக வடக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி தங்கவேல் பேசும்போது, 'உணவுகளை பாதுகாப்பான முறையில் தயாரித்து உட்கொள்ள வேண்டும். உணவு தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய் பொருட்களை மீண்டும், மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு அந்த எண்ணெயை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் குறித்து தெரிவித்தார். ஆயத்த உணவுகள் மற்றும் பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருட்களை வாங்கும்போது உணவு தயாரித்த தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் முழுமுகவரி, உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் எண் போன்றவற்றை ஆராய்ந்து வாங்க வேண்டும். குறைகள் இருந்தால் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். பின்னர் மாணவ-மாணவிகள் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
வடக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி ரவி வாழ்த்தி பேசினார். முடிவில் மாணவர் செயலாளர் சுந்தரம் நன்றி கூறினார். இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
--------
2 காலம்