விராலிமலை கிழக்கு ஒன்றிய விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் உணவு வழங்கல்


விராலிமலை கிழக்கு ஒன்றிய விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் உணவு வழங்கல்
x

விராலிமலை கிழக்கு ஒன்றிய விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

உலக பட்டினி தினமாக மே 28-ந் தேதி அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு அன்று நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் சாலையோரத்தில் வசிக்கும் முதியோர்கள், ஏழைகள், ஆதரவற்றோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கினர். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பர்வேஸ் அறிவுறுத்தலின் பேரில் விராலிமலை கிழக்கு ஒன்றிய விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒன்றிய தலைவர் மாத்தூர் விஜி, ஒன்றிய பொருளாளர் கவிஞன் மணிமுத்து, ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் விராலிமலை ஒன்றியம் மாத்தூரில் இருந்து கீரனூர் வரை புதுக்கோட்டை சாலை ஓரத்தில் உள்ள முதியோர்கள், ஏழைகள், சிறுவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் சுமார் 200 நபர்களுக்கு மதிய உணவு வழங்கினர். அப்போது ஒன்றிய இளைஞரணி பொருளாளர் அன்பு, இளைஞரணி சித்தாம்பூர் கார்த்தி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story