மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
மயிலாடுதுறையில் உள்ள மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறையில் உள்ள மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
மாம்பழ சீசன்
தமிழகம் முழுவதும் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் விவசாயத்தை போல், புஞ்சை திடல்களில் மாமரங்களும் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது மாம்பழ அறுவடை சீசன் தொடங்கியுள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்திலும் மாம்பழ சீசன் களை கட்டியுள்ளது.
நகரிலுள்ள அனைத்து பழக்கடைகளிலும் ஒட்டு, பாதிரி, பங்கனப்பள்ளி, செந்துாரா போன்ற மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவிக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.
எச்சரிக்கை
அதேசமயம் மாம்பழங்கள் ரசாயன பொருட்கள் கொண்டு பழுக்கவைக்கப் படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருகிறது. இதனையடுத்து நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன், திரு.வி.க. மார்க்கெட் பகுதிகளிலுள்ள மாம்பழ குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது எந்தவித ரசாயன பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. ஆனாலும் கார்பைடு கற்கள், ரசாயன பொருட்கள் பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைப்பது கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்தார்.