சத்துணவு ஊழியர்கள் தர்ணா
திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராமு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெசி, மாவட்ட செயலாளர் மணிக்காளை, மாவட்ட தலைவர் ஜான் பாஸ்டன் டல்லஸ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக்அலி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த தர்ணா போராட்டத்தின் போது பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story