சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெம்பக்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெம்பக்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆா்ப்பாட்டம்

வெம்பக்கோட்டை யூனியன் அலுவலக வளாகத்தில் காலை சிற்றுண்டி உணவு சத்துணவு அமைப்பாளர்கள் மூலம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு வட்ட கிளை அமைப்பாளர் செல்வி தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க தலைவர் ரவீந்திரன், முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இயக்கம்

மாநில மகளிர் அணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் சுசிலா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அதைத்தொடர்ந்து ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் சத்துணவு அமைப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் உமாதேவி நன்றி கூறினார்.


Next Story