சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2023 3:00 AM IST (Updated: 31 Aug 2023 3:01 AM IST)
t-max-icont-min-icon

தேனி பங்களாமேட்டில் சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி பங்களாமேட்டில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக முதல்-அமைச்சரின் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பவானி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். அப்போது சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதுபோல், மற்றொரு அமைப்பான தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தங்கமீனா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Related Tags :
Next Story