சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் லதா தலைமை தாங்கினார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் வேம்பு முன்னிலை வகித்தார். மாநில தலைவர் கலா, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சீனி.மணி, மாவட்ட செயலாளர் ரவீந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவர்களுக்கான உணவை ஊராட்சி நிர்வாகம் மூலமும், அம்மா உணவகங்கள் மூலமாகவும் சமைத்து பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை கைவிட்டு அனைத்து பள்ளிகளிலும் சத்துணவு கூடங்களில் உள்ள பணியாளர்கள் மூலமே காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில், மாவட்ட இணை செயலாளர் சிங்காரவேலு நன்றி கூறினார்.

இதேபோல, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமதேவன் தலைமை தாங்கினார். நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய செயலாளர் பிரேமா, மாவட்ட துணை செயலாளர் செபஸ்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story