சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி,
சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலைபடியுடன் கூடிய ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும், காலமுறை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் நீலகிரி மாவட்ட கிளை சார்பில், ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லதுரை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தால், குடும்பத்தை காப்பாற்ற உடனடியாக பிழைப்பு ஊதியம் வழங்க வேண்டும். தற்போது அறிவித்து உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை தமிழக அரசே நடத்த வேண்டும். தனியாருக்கு கொடுக்கக்கூடாது என்று கோஷம் எழுப்பினர். இதில் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.