சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு பணியாளர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். பள்ளி சிறுவர்-சிறுமிகளுக்கு காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்தின் மூலம் வழங்க வேண்டும். சத்துணவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மணிமேகலா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் கொளஞ்சிவாசு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஆனந்தராஜ், செல்லப்பிள்ளை, ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் வாழ்த்்தி பேசினர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் செல்வம் நன்றி கூறினார்.


Next Story