சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று மாலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும், காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும், பணிஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிக்கண்ணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமாரி வரவேற்றார். மாவட்ட செயலாளர் மலர், கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநில துணைத்தலைவர் அபராஜிதன் நிறைவுரையாற்றினார். இதில் மாநில தணிக்கையாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாநில துணைத்தலைவர் சாவித்திரி, மாவட்ட நிர்வாகிகள் சுந்தர்ராமன், வெங்கடேசன், அருளரசி, தனஞ்செயன், லட்சுமி, சந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தேவதாஸ் நன்றி கூறினார்.