சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

குன்னம்:

குன்னம் அருகே வேப்பூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் வெங்கடாசலபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் கால வாக்குறுதியில் தமிழக முதல்-அமைச்சர் கூறியவாறு சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியத்தை நீக்கி, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும். சத்துணவு கூடத்தில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் ரெவனேஸ்வரி நன்றி கூறினார்.


Next Story