சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டை
மாணவர்களுக்கு சத்துணவு மையங்கள் மூலமாகவே காலை உணவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்க துணைத்தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய சத்துணவு ஊழியர்கள் சங்க செயலாளர் விஜயா, தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்க மாவட்ட தலைவர் ரவி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வீராசாமி, அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் அறிவழகன் மற்றும் பலர் பேசினர். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அம்மா உணவகம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை எதிர்த்தும் அந்தந்த பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மூலமாகவே காலை உணவை வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் ரேவதி நன்றி கூறினார்.