கழிவு துணிகளிலிருந்து கால்மிதியடி தயாரிக்கும் பயிற்சி
கழிவு துணிகளிலிருந்து கால்மிதியடி தயாரிக்கும் பயிற்சி
திருப்பூர்
அவினாசி
கழிவு துணிகள் மற்றும் தையல்கடைகளில் வெட்டி எரியும் கழிவுகளில் இருந்து கால் மிதியடி தயாரிக்கும் பயிற்சி முகாம் அவினாசி பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் நடந்தது. தையல் கடைகளில் சேகரம் செய்யப்படும் துணிக்கழிவுகளில் இருந்து கால்மிதியடி தயாரிக்கும் பயிற்சி முகாமினை பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தொடங்கிவைத்தார். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சுயஉதவிகுழுவினர் ஆகியோருக்கு சேகரம் செய்யப்படும் துணி கழிவுகள் மீண்டும் மறு பயன்பாடு மூலம் கால்மிதியடி, கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயற்சி முகாம் நடந்தது. இம்முகாமில் திருச்சியை சேர்ந்த கிருஷ்ணவேணி அனைவருக்கும் பயிற்சி அளித்தார்.
Related Tags :
Next Story