திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி


திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி
x
தினத்தந்தி 8 Jan 2023 2:00 AM IST (Updated: 8 Jan 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கே.எப்.சி. கால்பந்து குழு சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோவில் அருகேயுள்ள மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் சென்னை, மதுரை, கோவை, சேலம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 44 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இதில் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் 12 அணிகளும், பொதுப்பிரிவில் 32 அணிகளும் பங்கேற்கின்றன. இந்த போட்டிகள் நாக்-அவுட் சுற்று அடிப்படையில் நடக்கிறது.

இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தரராஜன், செயலாளர் சண்முகம் ஆகியோர் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தனர். பின்னர் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நகர்ந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றிபெறும் அணிக்கு ரொக்கப்பரிசு மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் கே.எப்.சி. கால்பந்தாட்ட கழகத்தினர் செய்துள்ளனர்.


Next Story