2 மருத்துவர்கள் கவனக்குறைவால் கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்


2 மருத்துவர்கள் கவனக்குறைவால் கால்பந்து வீராங்கனை  உயிரிழப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
x

சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை,

சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார். சமீபத்தில் பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்து. இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கி குழுவினர் செய்த பரிசேதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது

இந்நிலையில், ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவர்களின் அலட்சிய போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம். அந்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்களின் மகளின் வாழ்வாதாரம் கருதி அரசு வேலை அமைத்து தரவேண்டும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிகைக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கால்பந்து வீரங்கனை பிரியா உயிரிழப்பு குறித்து விளக்கம் அளித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது ;

முதலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த மாணவி பிரியாவை வேறு மருத்துவமனைக்கு அனுப்பியது ஏன் என விசாரிக்கப்படும். என்ன தவறுகள் நடந்துள்ளது என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,

கால்பந்து வீரங்கனை பிரியா உயிரிழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு.சிகிச்சையின்போது ரத்த நாளங்கள் பழுதானதால் பிரியாவில் உடல்நிலை பாதிப்பு.சிகிச்சையின் போது ஈரல்,இதயம் என உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டன.

ரத்த நாளங்களில் ஏற்பட்ட பாதிப்பால் ரத்த ஓட்டம் நின்றுள்ளது. மூட்டு அறுவை சிகிச்சைக்காக போடப்பட்ட கட்டு காரணமாக வலி ஏற்பட்டுள்ளது.அறுவை சிகிச்சைக்கு பின் காலில் போடப்பட்ட கட்டு அழுத்தமாக போடப்பட்டதால் பாதிப்பு .

அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்கள் கவன குறைவால் வீராங்கனை மரணம் . 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம்.மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்.மருத்துவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு.

என்று தெரிவித்தார்


Next Story