பரதநாட்டிய மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பரதநாட்டிய மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
நாலாட்டின்புத்தூர்:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நடந்த கந்த சஷ்டி விழாவில், கழுகுமலை நேத்ரா ஸ்ரீகிட்ஸ் அண்டு கல்சுரல் அகாடமி சார்பில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அகாடமி பரத ஆசிரியை மல்லிகாவின் பயிற்சியில் மாணவிகள் அனுஸ்ரீ, ரேணுபிரியா, நேத்ராஸ்ரீ, ராமலட்சுமி, மகாலட்சுமி, அட்சயகுமாரி, நிஷிதாகுமாரி, சுபஷனாஸ்ரீ, மமிதா பானர்ஜி, நிரஞ்சனா, மோகனபிரியா, ரம்யா உள்ளிட்ட மாணவிகள் பங்குபெற்று பரதம் ஆடினர். இந்த மாணவிகளின் பரதநாட்டியத்தை பாராட்டி, கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் சான்றிதழ் வழங்கி பேசினார். அகாடமி நிர்வாகிகள் செல்வமுத்துகுமார், ரோஹினி, ஆசிரியை பார்வதி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story