'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரிதி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சி்ன்னமனூரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் மாநிலம் முழுவதும் நேற்று தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதன்படி, தேனி வடக்கு, தெற்கு தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் சின்னமனூரில் நடந்தது. காலை 9.30 மணி அளவில் தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது.
இந்த போராட்டத்திற்கு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆஜிப்கான், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். தேனி தெற்கு மாவட்ட செயலாளரும், கம்பம் எம்.எல்.ஏ. வுமான ராமகிருஷ்ணன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழக கவர்னரை கண்டித்தும் பேசினர்.
இந்த போராட்டத்தில் சின்னமனூர் நகராட்சி தலைவர் அய்யம்மாள்ராமு, ஒன்றிய குழு தலைவர் நிவேதா அண்ணாதுரை, நகர செயலாளர் முத்துக்குமார், தேனி தெற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், தேனி நகர செயலாளர் நாராயணபாண்டியன், முன்னாள் நகர பொறுப்பாளரும், 20-வது வார்டு நகராட்சி கவுன்சிலருமான பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.