தூத்துக்குடியில்முன்னாள் படைவீரர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
தூத்துக்குடியில்முன்னாள் படைவீரர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினவிழாவில் 10 ஆயிரம் முன்னாள் படைவீரர்களுக்காக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, ஊக்குவித்து மறு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் முன்னாள் படைவீரர்கள் திறன்மேம்பாட்டு திட்டத்தில் பயிற்சி பெற, விருப்பமுள்ளவர்கள் தனது விருப்பத்தை பதிவு செய்து மறுவேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சியில் கலந்து கொள்ளுவதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனரை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story