அதிக பாரம் ஏற்றிய லாரிக்குரூ.50 ஆயிரம் அபராதம்


அதிக பாரம் ஏற்றிய லாரிக்குரூ.50 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு அருகே அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு சஜிகுமார் நேற்று முன்தினம் காலையில் குளப்புறம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது ஒரு பெரிய டாரஸ் லாரி கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. ஏட்டு சஜிகுமார் லாரிைய நிறுத்துமாறு கூறினார். ஆனால் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். இதனால், ஏட்டு சஜிகுமார் லாரியை தனது வாகனத்தில் துரத்தி சென்று கொல்லங்கோடு அருகே உள்ள செங்கவிளை நாற்கரை சாலை தொடக்கத்தில் வைத்து மடக்கி பிடித்தார். தொடர்ந்து லாரியை சோதனையிட்ட போது அதிக பாரத்தில் கனிமவளங்கள் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story