பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி படுகர் சமுதாய மக்கள் நடைபயணம்
பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி படுகர் சமுதாய மக்கள் நடைபயணம்
நீலகிரி
ஊட்டி
நீலகிரி, நங்க தேச படுகர் தேச என்ற அமைப்பின் சார்பாக படுகர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் மீண்டும் சேர்த்திட வலியுறுத்தி ஊட்டி அருகே உள்ள கிராமத்தில் நடைபயணம் நடைபெற்றது. முன்னாள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சென்னமல்லன் தலைமை தாங்கினார். நடை பயணத்தில் ராஜாராம், பாலமுருகன் மஞ்சை.வி.மோகன் உள்பட பலர் கிராமத்திற்கு சென்ற போது திரளான படுகர் சமுதாய மக்கள் வரவேற்று நடை பயணத்தில் கலந்துகொண்டனர். படுகர் சமுதாயத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்ககோரி விளக்கி பேசினார்கள். மேலும் மாவட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவும் கொடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story