தேசிய தடகள போட்டிக்குதூத்துக்குடி பள்ளி மாணவி தேர்வு
தேசிய தடகள போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில அளவிலான 3-வது மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் சேலத்தில் கடந்த 15, 16 தேதிகளில் நடந்தது. இதில் தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் படித்துவரும் பிளஸ்-1 மாணவி எம்.காயத்ரி கலந்து கொண்டு குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டிகளில் முதல் இடம் பிடித்து பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் மாணவி காயத்ரி டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவி காயத்ரிக்கு பள்ளியின் செயலாளர் ஏ.பி.சி.வி.சண்முகம், தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தேசிய தடகள விளையாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவி காயத்ரிக்கு பள்ளி செயலாளர் சண்முகம் ரூ.5000 மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ரூ.7000 உதவித் தொகை வழங்கினர்.