தேசிய-மாநில அளவிலான போட்டிகளுக்கு லிட்டில் பிளவர் பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு


தேசிய-மாநில அளவிலான போட்டிகளுக்கு  லிட்டில் பிளவர் பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு
x

தேசிய-மாநில அளவிலான போட்டிகளுக்கு லிட்டில் பிளவர் பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வாகியுள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் மற்றும் கூடைப்பந்து போட்டிகள் சமீபத்தில் நடந்தது. இதில் செட்டிகுளம் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவர் அரவிந்தராஜ், பிளஸ்-2 மாணவி ஸ்வாதி ஆகியோர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று, வருகிற 25-ந் தேதி திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இதேபோல் மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் இப்பள்ளி மாணவி தேஜாஸ்ரீ தலைமையிலான அணி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, அடுத்த மாதம் டிசம்பர் 6-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான தமிழ்நாடு மென்பந்து (சாப்ட் பால்) ஜூனியர் அணியில் இப்பள்ளி மாணவர்கள் 6 பேர் இடம் பெற்று, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். தடகளம், மென்பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் ப.தமிழ்வாணன், பள்ளி முதல்வர்கள் கீதா, ரா.விஜயகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கீதா, சிவலிங்கமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.


Next Story