மகாத்மா ஜோதிராவ் புலே உருவப்படத்துக்குவிடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மரியாதை


மகாத்மா ஜோதிராவ் புலே உருவப்படத்துக்குவிடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மரியாதை
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் மகாத்மா ஜோதிராவ் புலே உருவப்படத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

இந்திய விடுதலை போராட்ட காலத்தில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிராவ் புலே பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் அருகில், அவரது உருவ படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார். இதில், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி, மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல் முத்து, திருச்செந்தூர் தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், காயல்பட்டணம் நகர செயலாளர் அம்பேத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story