ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு ஆய்வு கூட்டம்


ரேஷன் கடை பணியாளர்களுக்கு  சிறப்பு ஆய்வு கூட்டம்
x

தூத்துக்குடியில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மண்டலத்தில் பொதுவினியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை ரேஷன் கடை பணியாளர்களுக்கான சிறப்பு ஆய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது, அரசின் மிக முக்கியமான திட்டமான பொதுவினியோக திட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்களுக்கு தரமான அத்தியாவசிய பொருட்களை உரிய காலத்தில் எந்தவித புகாருக்கும் இடமின்றி வழங்க வேண்டும். தரமற்ற அரிசியை வழங்க கூடாது என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் பொதுவினியோக திட்ட துணைப்பதிவாளர் மாரியப்பன், சரக துணைப்பதிவாளர் ரவீந்திரன், தூத்துக்குடி மண்டலத்தில் கூட்டுறவுத்துறை நடத்தும் ரேஷன் கடைகளின் அனைத்து விற்பனையாளர்களும் கலந்து கொண்டனர்.


Next Story