உப்பள தொழிலாளர்களுக்குதனி நலவாரியம் அமைக்க கோரிக்கை


உப்பள தொழிலாளர்களுக்குதனி நலவாரியம் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தூத்துக்குடி

உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோரிக்கை மனு

தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மா.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஜிஎஸ்டி வரி வசூலில் 1 சதவீதத்தை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுபோல மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டில் 3 சதவீதத்தை அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். கட்டுமான தொழிலாளர் நலவாரியத்துக்கு 1- 2 சதவீதம் லெவி, ஓட்டுநர் நலவாரியத்துக்கு சாலை வரியில் 1 சதவீதம், வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு வீட்டு வரியில் 1 சதவீதம் என ஒவ்வொரு வகை தொழிலாளர்களுக்கும் லெவி முறை அமல்படுத்தவேண்டும்.

நலவாரியம்

உப்பளத் தொழிலாளர்களுக்கும், கை பூவேலை கூலித் தொழிலாளர்களுக்கும் தனி நலவாரியங்கள் அமைக்க வேண்டும். மீன் தொழிலாளர் நலவாரியத்தை செயல்படுத்தி மேம்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் மற்றும் சிமெண்ட், மணல், கம்பி போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.


Next Story