கோவில் பாதுகாப்பு பணிக்குமுன்னாள் ராணுவவீரர்கள் விண்ணப்பிக்கலாம்


தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 159 கோவில்களில் சிறப்பு காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த பணிக்கு மாத சம்பளம் ரூ.7 ஆயிரத்து 600 வழங்கப்படும். எனவே காலியாக உள்ள கோவில் பாதுகாப்பு பணியிடங்களில் சேர விருப்பம் உள்ள 62 வயதுக்கு உட்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்றுடன் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ராணுவவீரர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story