இந்திய ஜூனியர் ஆக்கி அணிக்குகோவில்பட்டிஎஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவர் தேர்வானார்
இந்திய ஜூனியர் ஆக்கி அணிக்கு கோவில்பட்டிஎஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
கோவில்பட்டி (கிழக்கு):
மலேசியாவில் 11- வது சுல்தான் ஜோகர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கிப்போட்டி வருகிற 27-ந் தேதி தொடங்கி நவ.4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய ஜூனியர் ஆக்கி அணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிறப்பு விளை யாட்டு விடுதியில் தங்கி, கோவில்பட்டி எஸ். எஸ். துரைசாமி நாடார்- மாரியம்மாள் கல்லூரியில் உடற்கல்வித்துறை 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் சதீஷ் தேர்வாகி உள்ளார். இந்த மாணவரை கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ. பி. கே. பழனி செல்வம், கல்லூரி செயலாளர் கண்ணன், பொருளாளர் மகேஷ், முதல்வர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினா்.
Related Tags :
Next Story