கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் கோப்பைக்கானஅகில இந்திய ஆக்கி போட்டி
கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி வியாழக்கிழமை தொடங்குகிறது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 12- வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி, 28-ந்தேதி வரை பகல்-இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெறு கிறது. போட்டி தொடக்க விழா இன்று மாலை 5.15 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து புதுடெல்லி, ஆடிட்டர் ஜெனரல் அணியும், மும்பை யூனியன் பேங்க் அணியும் மோதுகின்றன. மாலை 6.15 மணிக்கு டெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணியும், பெங்களூர் ரயில் வீல் பேக்டரி அணியும் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு ஹூப்பாலி தென் மேற்கு ரெயில்வே அணியும், கோவில்பட்டி எஸ். டி. ஏ. டி அணியும் மோதுகின்றன.
இப்போட்டிகள் காலிறுதி ஆட்டம் வரையில் லீக் முறையிலும், காலிறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது என நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல் அறிக்கையில் தெரிவித் துள்ளார்.