ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் இரங்கல் கூட்டம்


ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் இரங்கல் கூட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 9:02 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் இரங்கல் கூட்டம் நடத்தி அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி

நெல்லை கோட்ட காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கான இரங்கல் கூட்டம் தூத்துக்குடி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடந்தது. கூட்டத்துக்கு கோட்ட சங்க இணைச் செயலாளர் ஆர்.சீனிவாசன் தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் எஸ்.ராமசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ரெயில் விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும், விபத்து நடந்தவுடன் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்.ஐ.சி . 24 மணிநேர சேவையை அறிவித்து, இழப்பீடுகளை உடனடியாக வழங்க வலியுறுத்தி உள்ளது. இது போன்ற எல்.ஐ.சி நிர்வாகத்தின் செயல்கள் வரவேற்புக்கு உரியது. மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்வதற்கான எல்லா முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த மக்களின் துயரத்தில் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் பங்கு கொள்வதுடன், தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில் முதல்நிலை அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story