சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சள் பை வழங்கிய வனத்துறையினர்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சள் பை வழங்கிய வனத்துறையினர்
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பகத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி களக்காடு தலையணை சாலை, சோதனை சாவடி, சிறுவர் பூங்கா, ஆற்றுப்பகுதிகளில் மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி சுத்தம் செய்தனர். அதனைதொடர்ந்து சிறுவர் பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் பொதுமக்கள் மத்தியில் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தலையணைக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் இலவசமாக மஞ்சள் பைகளை வழங்கினர்.
மேலும் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள், வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story