உடன்குடி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறான உடைமரங்கள் அகற்றம்


உடன்குடி பகுதியில் போக்குவரத்துக்கு   இடையூறான  உடைமரங்கள் அகற்றம்
x

உடன்குடி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறான உடைமரங்கள் அகற்றப்பட்டது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி புதுமனையில் இருந்து சமத்துவபுரம் செல்லும் சாலையின் இருபக்கமும் உடை மரங்கள் வளர்ந்து வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் பாபு தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த உடைமரங்களை அகற்றினர்.


Next Story