திருநங்கைகளுக்குரேஷன் கார்டு வழங்க சிறப்பு முகாம்


தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்க சிறப்பு முகாம் சனிக்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு மின்னணு ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பாக சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிக்கும் மனுதாரர் தனது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம்) புகைப்படம் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஆகையால் மின்னணு ரேஷன் கார்டு தேவைப்படும் திருநங்கைகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story