மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்துக்கான புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்


மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்துக்கான  புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
x

தூத்துக்குடியில் மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்துக்கான புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

தூத்துக்குடி

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மத்திய அரசின் தொழிலாளர் நலத்திட்டங்களை 90 நாட்கள் மக்களிடையே பிரசாரம் செய்ய அறிவுறுத்தி உள்ளது. அதன்படி பிரதான் மந்திரி ஷ்ரம் யோகிமான் தன் என்ற ஓய்வூதிய திட்டத்தின் பயன்கள் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சென்றடையும் வகையிலும், இந்த திட்டத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லை மண்டல அலுவலர் (பொறுப்பு) குமாரவேல் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்ட அமலாக்க அதிகாரிகள் ஹரிகிருஷ்ணன், சபரீனா, நெல்லை மண்டல அமலாக்க அதிகாரிகள் திலகர், சதீஷ் ஆகியோர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைப்புசாரா தொழிலாளர்களான ஆட்டோ டிரைவர், நடைபாதை வியாபாரிகள், சிறு கடை வியாபாரிகள், காய்கறி கடை வியாபாரிகளை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி உறுப்பினராக சேர அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாமும் நடத்தப்பட்டது. இதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்கள் மூலமும் உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 300 பேர் புதிய உறுப்பினராக சேர்ந்து உள்ளனர். தொடர்ந்து அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story