விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.6 லட்சம் அபராதம்


விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.6 லட்சம் அபராதம்
x

வாணியம்பாடியில் கடந்த ஜூலை மாதம் விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ரூ.6 லட்சம் அபராதம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கடந்த ஜூலை மாதம் முழுவதும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிக பாரம் ஏற்றி சென்ற சரக்கு வாகனங்கள், வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் சாலை விதிகளை மீறிய இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மொத்தம் 1,074 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. அதில் 162 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டு, இணக்க கட்டணம் ரூ.4,65,225, சாலை வரியாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 86 என மொத்தம் ரூ.6 லட்சத்து 40 ஆயிரத்து 311 வசூலிக்கப்பட்டது.

43 வாகனங்கள் பறிமுதல்

மேலும் தணிக்கையின் போது 6 சரக்கு வாகனங்கள், 14 ஆட்டோக்கள், ஒரு பள்ளி வாகனம் மற்றும் 22 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மீது சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


Next Story