தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொபட்டில் கொண்டு சென்றவர் கைது
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொபட்டில் கொண்டு சென்றவரை போலீசாா் கைது செய்தனா்.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் சோதனைச்சாவடியில் பங்களாப்புதூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் மொபட்டில் வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது அவரிடம் தமிழக அரசால் தடை ெசய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டனர். இதைத்தொடர்ந்து மொபட்டில் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினாா்கள். விசாரணையில், 'அவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், கொள்ளேகால் ஊக்கியம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (வயது 40) என்பதும், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும்,' தெரியவந்தது. இதையடுத்து பழனிச்சாமியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 293 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.