கொடைக்கானலில் சிக்கிய வெளிநாட்டு பறவை


கொடைக்கானலில் சிக்கிய வெளிநாட்டு பறவை
x

கொடைக்கானலில் பறக்கமுடியாமல் தவித்த வெளிநாட்டு பறவை சிக்கியது.

திண்டுக்கல்

கொடைக்கானல் நாயுடுபுரத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள மரத்தில், நேற்று பறவை ஒன்று அங்கிருந்து நகர்ந்து செல்ல முடியாத அளவுக்கு சோர்வுடன் அமர்ந்திருந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அந்த பறவையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வெள்ளை நிறத்தில், நீண்ட அலகை கொண்ட அந்த பறவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அது கிரேட்இ கிரிட் என்ற வகையை சேர்ந்த வெளிநாட்டு பறவை ஆகும். ஆப்பிரிக்கா, அமெரிக்க நாடுகளில் அதிக அளவில் வசித்து வருகின்றன. இனப்பெருக்கத்துக்காக அங்கிருந்து கொடைக்கானல் பகுதிக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. நீண்ட தூரம் பறந்து வந்ததால், உடல் சோர்வுற்று மரக்கிளையில் தஞ்சமடைந்தது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே வனச்சரகர் சிவக்குமார், வனவர் அழகுராஜா ஆகியோர் கால்நடை உதவி இயக்குனர் (ஓய்வு) டாக்டர் அக்கீம் உதவியுடன் அந்த பறவையை உடல் பரிசோதனை செய்தனர். அதில் பறவை நல்ல நிலையில் இருப்பது தெரியவந்தது. அதற்கு இரை கொடுத்து, அப்சர்வேட்டரி தடுப்பணை பகுதியில் அந்த பறவையை வனத்துறையினர் விட்டனர்.


Related Tags :
Next Story