ரூ.46 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை
திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கடத்தி வரப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாய் புறப்பட தயாராக இருந்தது. இதனையடுத்து விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ரூ.46 லட்சம் பறிமுதல்
அப்போது திருச்சியைச் சேர்ந்த சதாம் உசேன் (வயது 46) என்பவர் வெளிநாட்டு பணமான 53,133 யூரோவை கடத்த இருந்தது தெரியவந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் சதாம் உசேனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.46 லட்சம் ஆகும்.