நெரிஞ்சிப்பேட்டை படகுத்துறைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள்
நெரிஞ்சிப்பேட்டை படகுத்துறைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள்
அம்மாபேட்டை
அம்மாபேட்டையை அடுத்துள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும் சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையே படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இங்கு நெரிஞ்சிப்பேட்டை கதவனையில் மின்சார உற்பத்திக்காக தண்ணீர் தேக்கப்படுவதால் காவிரி ஆறு கடல் போல் காட்சி அளிக்கும். மேலும் சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளதால் இயற்கை எழில் சூழ்ந்து காணப்படும். இதனால் இந்த பகுதி குட்டி கேரளா போல் காட்சியளிக்கும். இதனால் காவிரி ஆற்றில் படகு சவாரி செய்வதற்காக சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்வார்கள். இந்தநிலையில் நேற்று அமெரிக்காவை சேர்ந்த ஆண், பெண் குழந்தைகள் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்து படகில் சுற்றுப்பயணம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.