வைத்தீஸ்வரன்கோவிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்
வைத்தீஸ்வரன்கோவிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்
மயிலாடுதுறை
சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவகிரகங்களில் செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமாரசுவாமி, 18 சித்தர்களின் முதன்மையான தன்வந்திரி தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு வாழும் கலை ரவிசங்கர் குருஜியின் சீடர் பிரணவானந்தா தலைமையில் தைவான், ஸ்பெயின், கஜகஸ்தான், குரோஷியா, ரஷ்யா, இங்கிலாந்து, பங்களாதேஷ், அர்ஜென்டினா, உருகுவே ஆகிய 9 நாடுகளை சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் சாமி, அம்பாள், செல்வமுத்துக்குமார சாமி, செவ்வாய் பகவான் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை வாழும் கலை ஆசிரியர் சிவக்குமார் செய்திருந்தார்.
Related Tags :
Next Story