வேட்டி, சேலை அணிந்து பொங்கல் விழா கொண்டாடிய வெளிநாட்டினர்


வேட்டி, சேலை அணிந்து பொங்கல் விழா கொண்டாடிய வெளிநாட்டினர்
x

ஆண்டிமடம் அருகே வேட்டி, சேலை அணிந்து வெளிநாட்டினர் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் கோயன் வான் ராம்பே, வெர்லி, ராபின் உள்ளிட்டோர் தமிழரின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். அப்போது அங்கிருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து, கும்மி அடித்தனர். செங்கரும்புடன் கூடிய பொங்கல் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிபாடு செய்வதை நேரில் பார்வையிட்டு, அதன் விளக்கத்தை ரீடு தொண்டு நிறுவன நிறுவனர் ரீடு செல்வத்திடம் கேட்டறிந்தனர். மேலும் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையில் தாங்களும் பங்கேற்றது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


Next Story