ஈரோடு வனக்கோட்டத்தில் 100 ஏக்கரில் வளர்ந்திருந்த வெளிநாட்டு செடிகள் அகற்றம்; வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தகவல்


ஈரோடு வனக்கோட்டத்தில் 100 ஏக்கரில் வளர்ந்திருந்த வெளிநாட்டு செடிகள் அகற்றம்; வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தகவல்
x

ஈரோடு வனக்கோட்டத்தில் 100 ஏக்கரில் வளர்ந்திருந்த வெளிநாட்டு செடிகள் அகற்றப்பட்டு உள்ளதாக வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறினார்.

ஈரோடு

ஈரோடு வனக்கோட்டத்தில் 100 ஏக்கரில் வளர்ந்திருந்த வெளிநாட்டு செடிகள் அகற்றப்பட்டு உள்ளதாக வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறினார்.

புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வன சுற்றுச்சூழல் சுற்றுலாவின் கீழ் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு மாணவ -மாணவிகள் அழைக்கப்பட்டு குடியரசு தினத்தன்று பரிசுகள் வழங்கப்பட்டன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின்னர், சத்தி வனப்பிரிவில் புலிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து உள்ளது. வன உரிமைச் சட்டத்தின் கீழ், பழங்குடியினர் வன ஊழியர்களின் பாதுகாப்புடன் வனப்பகுதியில் சீமார் புல் சேகரிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

வெளிநாட்டு செடிகள் அகற்றம்

ஈரோடு பிரிவில் 733 விண்ணப்பதாரர்களில், 617 பேர் வனப்பகுதியில், இஸ்ரோ ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்டறியப்பட்ட சாகுபடி நிலத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு பசுமை திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 2 கோடியே 83 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. இதில் ஈரோடு கோட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

காட்டுத்தீ தடுப்பு மற்றும் தணிப்பு குழுவினரின் உதவியுடன் காட்டுத்தீ தடுப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. சத்தியமங்கலம் வனப்பகுதியில் சந்தன மரங்கள் இயற்கையாக வளர்கின்றன. இருப்பினும், சென்னம்பட்டியில் 5 ஏக்கர் சந்தன நாற்றங்கால் உள்ளது. மேலும் கோர்ட்டு உத்தரவுப்படி ஈரோடு வனக்கோட்டத்தில் 100 ஏக்கரில் வளர்ந்திருந்த வெளிநாட்டு செடிகள் அகற்றப்பட்டு உள்ளன.

இவ்வாறு வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறினார்.


Next Story