மலையில் 2-வது நாளாக எரியும் காட்டுத்தீ


மலையில் 2-வது நாளாக எரியும் காட்டுத்தீ
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுங்கான்கடையில் மலையில் 2-வது நாளாக எரியும் காட்டுத்தீ

கன்னியாகுமரி

அழகியமண்டபம்,

நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடை அருகே உள்ள மலையில் நேற்றுமுன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தில் தீ மள... மள..வென எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்தப் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் தீயை அணைக்க சிரமப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக காட்டுத்தீ எரிந்து கொண்டே இருந்தது. இதில் அந்த பகுதியில் உள்ள விலை உயர்ந்த மரங்கள் தீக்கி இரையாகி வருகிறது. குடியிருப்பு பகுதியில் தீ வராமல் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மலையில் எரியும் தீைய தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.


Next Story